மலேசியாவில் முனைவர் பட்டம் படித்து வரும் மாணவர் பாரதிதாசன். இவர் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் படித்து வருகிறார். இவர் தனக்கு இத்திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு நிதி வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் ஆண்டு நித வழங்கப்படவில்லை என்றும், இதனால் தனது கல்வி பாதிக்கப்படுவதாகவும் உறுக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சமூகநீதித் துறை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பல்கலை.பதிவாளருக்கு மாணவர் பாரதிதாசன் ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தேவைப்படுகிறது என்பதை பரிந்துரைத்து அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் உதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது. மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன், மாணவர் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார்” என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மாணவர் பாரதிதாசன் அரசின் அறிக்கைக்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “ தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 8 ஆம் தேதி வரை ரூ. 36 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். நான் ரூ. 37 லட்சத்துக்கான பில்லை பல்கலைக்கழகம் வாயிலாக சமர்ப்பித்துள்ளேன் என்று கூறி ஆதாரத்திக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 26 ஆம் தேதி நான் விளக்கமளித்து அனுப்பிய மெயில் உங்கள்ஸ்பேம் (Spam)-ல் இருக்கிறதா? என்று பாருங்கள். நான் எல்லா Bill-களையும் ஏற்கெனவே அனுப்பி விளக்கத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் சமூக நீதித்துறை என் மீது Narrative செட் செய்கிறார்கள். என் கனவை சிதைக்கிறீர்கள். நான் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.




