பள்ளிகள் திறப்பில் மாற்றம்…? – முதலமைச்சர் விஜயுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை…!

தமிழ் நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் விஜயுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் 4 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்திடம் பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை, வெயில் என வானிலை நிலவரம் குறித்த கோப்புகளை வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டு இருக்கிறோம். வானிலை ஆய்வு மையத்தின் கோப்புகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்து ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தமிழ் நாடு முதலமைச்சர் விஜயுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.