ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்.! தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 24 முதல் 30-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில்…

பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 24 முதல் 30-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள சித்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 10.55 மணிக்கு வண்டி எண் 07581 கொண்ட பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு வண்டி எண் 07660 கொண்ட பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு தினமும் காலை 5.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06584 கொண்ட இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூலை 24 முதல் 30 -ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக வண்டி எண் 06853 கொண்ட ரயில் திருப்பதியிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் விழுப்புரம் சென்றடையும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.