சந்திரயான் 3 – ன் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் துல்லியமான புகைப்படம்!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவிற்கு அருகாமையில் சென்று எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக விண்கலத்திலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு…

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவிற்கு அருகாமையில் சென்று எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக விண்கலத்திலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன.

இதனை தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் கொண்டு வரப்பட்டுள்ளது. லேண்டர் தரையிறங்கும் நிலவின் மேற்பரப்பின் தன்மையை அறிந்து அதற்கேற்ப தரையிறக்க உதவும் வகையில் லேண்டரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எல்எச்டிஏசி அதிநவீன கேமராவால் ஆகஸ்ட் 20-ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் துல்லிய புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.