சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளது.
நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ ) X தளத்தில் வெளியிட்டுள்ளது.
https://twitter.com/isro/status/1694327198394863911?t=1bFqDePp19nQPl_cSi-sjw&s=19
இந்நிலையில், கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய தினம், பாகிஸ்தான் அணியுடனான வெற்றி பிறகு விராட் கோலி பதிவிட்ட டிவீட், X தள வரலாற்றிலேயே இந்தியாவில் அதிகம் லைக் (796K) செய்யப்பட்ட டிவிட் என்ற சாதனையை படைதிருந்த நிலையில், சந்திரயான் 3 நிலவில் தடம் பதித்தது குறித்த இஸ்ரோவின் டிவிட், விராட் கோலியின் டிவிட்டை விட அதிக லைக்குளை குவித்து சாதனை படைத்துள்ளது.
https://twitter.com/imVkohli/status/1584170142254084098?t=SNZOmiNBr0aIpBWnOIch1Q&s=19







