ஓடிடியில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்ஃப்ளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான…

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்ஃப்ளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நவம்பர் மாதம் வெளியாகலாம் என செய்திகள் வெளியானது.லைகா தயாரித்த இந்த படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்.26ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.