அமெரிக்க அதிபர் பைடனின் பாசாங்கால் தான் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக உள்ளார். இதற்கு முன்பு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 2017-2021 காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தார். இந்நிலையில் டிரம்ப் அதிபர் பைடனை கடுஎன்னை விரைவில் கைது செய்ய வாய்ப்பு – முன்னாள் அதிபர் டிரம்ப்மையாக வசைபாடியுள்ளார். ஹாலிவுட் நடிகைக்கு பணம் கொடுத்ததாக சொல்லி, அதிபர் பைடன் நியூயார்க் நடுவர் மன்றம் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தி தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், இதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தன் ஆதரவாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிக்க: இந்திய தேசிய கொடியில் சாகித் அஃபிரிடி போட்ட ஆட்டோகிராஃப்பால் வெடித்த சர்ச்சை
2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தலின் போது டிரம்ப் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு அப்போது மிகப்பெரியளவில் பேசுபொருளானதால் அதை மறைக்க டிரம்ப் சார்பில் கட்சியின் பிரசார நிதியில் இருந்து நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நடந்து வரும் வழக்கில் தான் டிரம்ப் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை உறுதி செய்யும் விதமாகத்தான் டிரம்ப் தான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார். இதுப்பற்றி டிரம்ப் மேலும்., பைடனால் ஜனநாயக ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் இதுபோல பாசாங்கு வேலை செய்கிறார் என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








