தமிழ்நாட்டில் வரும் ஜூலை 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக…

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனையடுத்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 15-ம் தேதி முதல் ஜூலை 16-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.