அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. மேலும் வருகிற மார்ச் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்து மூன்று மணி நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
– யாழன்








