அடுத்து 3மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று (ஜன.07) 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

தமிழ்நாட்டில் இன்று (ஜன.07) 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

முன்னதாக, ஜனவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளிலும்,  கன்னியாகுமரி,  நெல்லை,  தென்காசி, விருதுநகர்,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் ,விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.