#RainAlert – தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நீலகிரி, கிருஷ்ணகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த…

தமிழ்நாட்டில் நீலகிரி, கிருஷ்ணகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.