முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்பு உள்ள 7 சவால்கள்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

24 வருடங்களுக்கு பின் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியிருக்கிறார். அந்த பெருமை பெற்றிருக்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே. வாக்கெடுப்பு மூலம் காங்கிரஸ் தலைவர் பதவியை அடைந்த  மிகச் சிலரில் ஒருவர் என்கிற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. அதே நேரம்  இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன. 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான தோல்வி மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் என காங்கிரசுக்கு கடந்த 8 ஆண்டுகள் பெரும் சோதனை காலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் கார்கே. அவர் முன்பு காத்திருக்கும் சவால்கள் என்னவென்று பார்ப்போம். 

1) வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்பு நடைபெற உள்ள இமாச்சல் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றியை நிலைநாட்டி காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டியது மல்லிகார்ஜூன கார்கே முன்பு உள்ள பெரும் சவாலாக கருதப்படுகிறது. குறிப்பாக தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் காங்கிரசை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவது அவருக்கு ஒரு கவுரவப் பிரச்சனையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.2) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்த குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தி மீதும் கட்சியின் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும் பலர் காங்கிரசிலிருந்து வெளியேறுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அது போன்ற அதிருப்திகள் எழாமல் கட்சியில் ஒற்றுமையை பேணிக்காப்பது கார்கே முன்பு உள்ள மற்றொரு சவாலாக பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

3) காங்கிரஸ் கட்சியில் இளைய தலைமுறை தலைவர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே  தலைமுறை இடைவெளி பிரச்சனைகள் எழாதவாறு கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமையும் கார்கே முன்பு உள்ளது.  காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை என்கிற விமர்சனம் எழாமல் பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் இளைய தலைமுறை தலைவர்களின் சிந்தனைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய பொறுப்பும் மல்லிகார்ஜூன கார்கே வசம் உள்ளது.5) சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.  சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் காட்டிய கொந்தளிப்பை ராஜஸ்தானுக்கு நேரில் சென்று பார்த்தவர் மல்லிகார்ஜூன கார்கே. அப்போது  பிரச்சனையை தீர்த்து வைக்க, இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தியின் பிரதிநிதியாக ஜெய்ப்பூர் சென்றவர் தற்போது காங்கிரஸ் தலைவராகவே ஆகிவிட்டார். ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை தவிர்த்து ஆட்சி கவிழாமல் பாதுகாக்க கார்கே என்ன செய்யப் போகிறார் என்பதும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது.

6) காங்கிரஸ் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது கட்சியில் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வேன் என்றும் கார்கே உறுதியளித்திருந்தார். ராகுல்காந்தி விரும்புவதாகக் கூறப்படும் அந்த அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை கட்சியில் விரிசல் எழாதவகையில் மல்லிகார்ஜூன கார்கே எவ்வாறு அமல்படுத்தப்போகிறார் என்பதும் தேசிய அரசியலில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

7) 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மேலும் வலுப்பெற வைப்பதும் மல்லிகார்ஜூன கார்கே முன்பு உள்ள முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை ஏற்படுத்துவதும் புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்பு உள்ள முக்கிய பணியாக கருதப்படுகிறது. இப்படி பல்வேறு சவால்கள் காத்திருக்கும் நிலையில் அதனை வெற்றிகரமாக சமாளித்து காங்கிரஸ் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல மல்லிகார்ஜூன கார்கே என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேளம்பாக்கம் அருகே பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் கைது

EZHILARASAN D

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனத்தின் புதிய யுக்தி?

Halley Karthik

செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

G SaravanaKumar