அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விருப்ப மனு பெற்று தாக்கல் செய்தனர்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் விருப்ப மனு தாக்கல் செய்தார். இன்று முகூர்த்த நாள் என்பதால் பெரும்பாலானோர் இன்றே விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். முன்னதாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர்கள், மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.