மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு மே 31ம் தேதி வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.86,912 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் தங்களின் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், நிதி நிர்வாகத்தை சிரமமின்றி கையாளவும் இந்த நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 9 ஆயிரத்து 602 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் மொத்தம் 86 ஆயிரத்து 912 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை என்றும் மீதமுள்ள ரூ.61,912 கோடி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.








