நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழில்,  டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் வேணு அரவிந்த், வாணி ராணி, அலைகள், ஆடுகிறான் கண்ணன், வாழ்க்கை உள்பட…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழில்,  டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் வேணு அரவிந்த், வாணி ராணி, அலைகள், ஆடுகிறான் கண்ணன், வாழ்க்கை உள்பட பல தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக , அந்த ஒரு நிமிடம், நரசிம்மா, வேகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் வேணு அரவிந்த். ஜெயராம், ஸ்ரீரஞ்சனி நடித்த ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அதில் இருந்து மீண்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். பின்பு அவரது மூளையில், கட்டி இருந்தது தெரியவந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. அவர் உடல் நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.