சென்னை மண்ணடியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை மண்ணடியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மாவட்டம் மண்ணடி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 30…

சென்னை மண்ணடியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை மாவட்டம் மண்ணடி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 30 லட்சம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மண்ணடியைச் சேர்ந்த முகமது அர்ஷத்  என்கிற நபர் தங்கம் கடத்தி வரும் போது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரின்  வீடான மண்ணடி மரைக்காயர் தெருவில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ. 30 லட்சம் ரொக்கம் மற்றும் சுமார் ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் கைது செய்யப்பட்ட முகமது அர்ஷ்த்திடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.