சென்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக…

டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்தார். டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தொண்டர்களுக்கு கை அசைத்தார்.

அவரை மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்  விமான நிலையத்தில் மலர் கொடுத்து வரவேற்பளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், ராஜ் பவன், கம்பன் கலையரங்கம் மற்றும் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா செல்ல இருக்கிறார். புதுச்சேரியிலிருந்து நாளை மாலை 6.15 மணி அளவில் சென்னை திரும்பும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

சென்னைக்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் மையத்தில் தங்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.