மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலை நோக்கு அடிப்படையில் மாநிலங்களோடு இணைந்தே செயல் பட்டுவருகிறது என மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேட்டி.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் நேற்று தொடங்கி வைத்தார். மாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நாட்டிலுள்ள துறைமுகங்களில் சாகர்மாலா திட்டத்தின்மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளால் 850 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த துறைமுகங்களின் கொள்ளளவு 1600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டு தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தபட்டு வருகின்றன. சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 திட்டப் பணிகளுள் 43 பணிகள் முடிவடைந்துள்ளன. தமிழகத்தில் கடலோர மேம்பாட்டுக்கு மட்டும் 12,368 கோடி ரூபாய் செலவில் 111 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஐந்து மில்லியன் அமெரிக்கன் டாலர் பொருளாதார இலக்கை அடைய அனைத்து துறைமுகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் கடல் வழி மற்றும் நீர் வழிப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திட்டங்களை விரைந்து முடிக்க கதி சக்தி திட்டம் மூலம் பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக மசோதாவால் மாநிலத்தின் உரிமை
பறிக்கப்படாது. மத்திய அரசானது நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி என்ற
தொலை நோக்கு அடிப்படையில் மாநிலங்களோடு இணைந்தே செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிமல் உடன் இருந்தனர்.