தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் கொரோனா தடுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.