நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

நடிகை மீராமிதுன் தலைமறைவான விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பட்டியலினத்தவர் குறித்து இழிவாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

நடிகை மீராமிதுன் தலைமறைவான விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பட்டியலினத்தவர் குறித்து இழிவாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்தார்.இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடைபெற்றது.

அப்போது மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவான நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாளை லுக் அவுட் கொடுக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக மீராமிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சியமாளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.