இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் – பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்..!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த் அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களிலும், மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டும் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளை பெறுவதற்காக விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பான செய்திகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,
பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள்
உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.