திடீரென வெடித்து சிதறிய செல்போன் | சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்…

ராமநாதபுரத்தில் செல்போன் வெடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை…

ராமநாதபுரத்தில் செல்போன் வெடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை சேர்ந்தவர் இளைஞர் ரஜினி.

இவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து பைக்கிலேயே மதுரைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ரஜினியின், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.

செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கமுதக்குடி என்ற இடத்தில் கீழே விழுந்த ரஜினி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.