மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக மாநகர பேருந்துகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அவசர அழைப்பு பொத்தான்களின் செயல்பாடும் தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பொத்தான் வசதி அமல் நிர்பயா பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ் 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத்தான் பொருத்த முடிவு செய்யப்படுள்ளது. மேலும், போக்குவரத்துத்துறையில் பணியாற்றிய 136 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் இந்த நிகழ்வில் வழங்கினார். இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அண்மைச் செய்தி: ‘பயணி தாக்கியதில் பேருந்து நடத்துநர் உயிரிழப்பு; 10 இலட்சம் நிதியுதவி’
பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. ஆனாலும், அது செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிக அதிகமாக இருக்கிறது. அத்துடன் இல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை சென்றடைவதற்குள் குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அபாய பொத்தான் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.