சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் 97.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட கால தாமதம் ஆன நிலையில் கடந்த 4ம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதையடுத்து தேர்வு முடிவை ஆவலாக எதிர்பாத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிபிஎஸ்இ பள்ளிகளிடம் இருந்து பொதுத்தேர்வு முடிவுகளை சேகரிப்பதால் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மிக விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சிபிஎஸ்இ பிளஸ் 2க்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த பிளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாகவும், திருவனந்தபுரம் முதல் இடத்தையும், பெங்களூரு 2ம் இடத்தையும், சென்னை 3ம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.