முக்கியச் செய்திகள் சினிமா

பிடித்த நடிகர்கள் யார்?-லெஜண்ட் சரவணன் பதில்

தி லெஜண்ட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் துபாயில் நடைபெற்றது.
அதில் படத்தின் கதாநாயகன் சரவணன், நடிகைகள் ஊர்வசி ராதெல்லா, லட்சுமி ராய், இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய லட்சுமி ராய் பேசுகையில், “துபாய் எனக்கு இரண்டாவது வீடு. நான் எப்போது இங்கு வந்தாலும் சிறந்த வரவேற்பு கிடைக்கும். இந்தப் படத்தின் பெயரே சிறப்பானதாக இருக்கிறது.இந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறோம். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படத்தின் கதாநாயகி ஊர்வசி ராதெல்லா பேசுகையில், “படத்தின் அனைத்து காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு இதுதான் தமிழில் முதல் படம். கதாநாயகன் சரவணன் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி வேலை வாங்கிய விதமும் அருமையாக இருந்தது. நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடித்து முடித்தேன்” என்றார்.

இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி பேசியபோது, ” இந்தப் படம் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கைத் தரும். அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். வெற்றி விழாவில் சந்திப்போம்” என்று தெரிவித்தனர்.

கதாநாயகன் சரவணன் பேசுகையில், “இந்தப் படத்தில் நடித்தவர்களில் பலரும் எனது நண்பர்கள்தான். விஜயகுமார், லதா போன்ற சீனியர் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர் பிரபு செட்டில் இருக்கும்போகு கலகலப்பாக இருக்கும். நகைச்சுவை நடிகர் விவேக் இறந்தது மிகப் பெரிய இழப்பு. அவரது இறப்பு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பட ஷூட்டிங்கில் அவருடன் நடித்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். நடிகை ஊர்வசி சிறப்பாக நடித்துள்ளார். லட்சுமி ராய் மிகச் சிறப்பாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் ஹிட் அடித்துள்ளது. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி நீண்ட காலமாக என்னுடன் பயணிக்கின்றனர். இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியுள்ளனர். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் சிறப்பாக இசை அமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. படத்திற்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. வரும் 28ம் தேதி படம் வெளியாகிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். படக்குழுவினர் பதிலளித்தனர்.

யாரை பார்த்து சினிமாவிற்கு வந்தீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் விஜய் ஆகியோரை பிடிக்கும். ஹிந்தியில் சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரை பிடிக்கும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor

சிரம்பரம் கோவில் விவகாரம்; தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்

G SaravanaKumar

செக் மோசடி வழக்கு விவகாரம்; இயக்குநர் லிங்குசாமி விளக்கம்!

Arivazhagan Chinnasamy