சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்க உள்ள…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்க உள்ள தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது.  அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த தேர்வினை 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.  இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1. 30 மணிக்கு நிறைவடையும்.

குறிப்பாக டெல்லி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியை சுற்றி இருக்கும் மாணவர்கள் மட்டும் காலை 10 மணிக்குள்ளாகவே தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.