சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் இன்று பிற்பகல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நாடு முழுவதும் 4 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்தனர். கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமடைந்ததால், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேநேரத்தில், மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடும் முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மதிப்பெண்ணில் திருப்தி அடையாத மாணவர்கள், கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தேர்வு எழுதலாம் என ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.








