சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது. ஏற்கெனவே சித்ரா மற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல்…

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது.

ஏற்கெனவே சித்ரா மற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை சிபிஐ விடுத்திருந்தது. ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் இயக்குநர் ரவி நரேன் 1994 முதல் 2013 வரை தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2013-2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் அங்கு பணியாற்றியபோது நிர்வாக ரகசியத் தகவல்களையும் அங்கு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் இமய மலையில் இருக்கும் ஒரு முகம் தெரியாத சாமியாரிடம் பகிர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவரின் இந்த செயலுக்கு ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் ரவி நரேனும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் இவர்களது குற்றத்திற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.25 லட்சம் மற்றும் ரவி நரேனுக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தது.

2018ம் ஆண்டிலிருந்து விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள லுக் அவுட் சுற்றறிக்கையை சிபிஐ விடுத்துள்ளது. மேலும் மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தனியார் நிறுவனம் ஒன்று NSE-இன் தரவுத்தளத்திலும் பரிமாற்றத்தின் சர்வரில் உள்நுழையவும் NSE அதிகாரிகள் சிலர் மூலம் நியாயமற்ற முறையில் அணுகியதாகவும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் சிபிஐ, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.