எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு
அதிகாரி கனகராஜ் வீட்டில் , கோவை மாவட்ட சிபிசிஐடி காவல்துறை
விசாரணை நடத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ம் ஆண்டு
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது.
எஸ்டேட் காவலாளி இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த
ஏராளமான ஆவணங்கள் கொள்ளை போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மனோஜ், சயன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல்துறை விசாரணை செய்தது. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை
தீவிரப்படுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் தற்போது ஆவடியில் ஆயுதப்படையில் உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். மேலும்,
கோவை மாவட்டம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில், காவலர்கள்
சென்னை மந்தைவெளியில் உள்ள கனகராஜ் வீட்டில் சோதனை செய்தனர். அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சோதனை நடைபெற்றது.
—-கு.பாலமுருகன்







