சாதி, மொழியால் நாட்டின் பொது சூழலை பாஜக அரசு அழித்துவிட்டது- ராகுல் காந்தி

சாதி மற்றும் மொழியால் இந்தியாவின் பொது சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம்…

சாதி மற்றும் மொழியால் இந்தியாவின் பொது சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பஞ்சாபில் தனது பயணத்தை தொடங்குவதற்கு முன்பு காந்தி குருத்வாரா பதேகர் சாஹப்பில் வழிபாடு செலுத்தினார். அங்கு நடைபெற்ற கூட்டத்தின் பேசிய ராகுல் காந்தி, “ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு எதிராக பயன்படுத்த மத்தியில் ஆளும் பாஜக முயற்சி செய்து வருகிறது. நாட்டின் பொது சூழலை அவர்கள் அழித்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “ இந்த ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் வெறுப்புக்கு எதிரான போராடுவது, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதாகும். அதேநேரத்தில் அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதே இந்த நடைபயணத்தின் நோக்கம். அந்த பாதையில் இந்தியா பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். தனது பயணம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் போது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு பாஜக பரப்பும் வெறுப்பும், பயம்தான் காரணம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் 8 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த நடைபயணம் வரும் ஜனவரி 19-ம் தேதி முடிவடைகிறது. பின்பு ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் நடைபயணம் தொடங்க இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.