டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையில், மனுதாரர்களை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையில், ஏப்ரல் மாதம் தேர்வு தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆனால், ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை இப்போது ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதால் தேர்வு தேதியை ஒத்தி வைக்கக் கேட்கிறோம் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் நீட் தேர்வு தேதி அட்டவணை ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது தானே? ஏன் இப்போது நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு, ஒட்டுமொத்த மாணவர்களுக்காக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ‘கம்பேக் கொடுத்தாரா லிங்குசாமி, தி வாரியர் திரைப்படத்தின் விமர்சனம்’
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏன் பொதுநல வழக்காக இதனைத் தொடரவில்லை? தேர்வு நடைபெற உள்ள சில நாட்களுக்கு முன்னதாக 15 மாணவர்களால் மட்டும் எப்படி வழக்கு தொடர முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு, பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர். அப்படி இருக்கையில் எப்படித் தேர்வுக்கு மட்டும் மாணவர்களால் பயணம் செய்ய முடியும்? என வாதிடப்பட்டது.
சில மாணவர்களால் தேர்வுக்குப் போக முடியவில்லை எனக் கூறி ஒட்டுமொத்த தேர்வையும் ஒத்திவைக்கக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனக் கூறிய நீதிபதிகள், இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.