முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து
செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி
விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
செய்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில்
விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச
ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது
ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ்
பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த
விவரங்களை விளக்கினர்.


இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு
வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம்
தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 4.4 லட்சம் அபராதம் வசூல்!

Halley Karthik

கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?

EZHILARASAN D

“சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது”

Arivazhagan Chinnasamy