தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் விஜயராகவன் மீது வழக்கு!

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் மொழியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை 2-வது உலக தமிழ் மாநாடு 1968ஆம்…

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் மொழியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை 2-வது உலக தமிழ் மாநாடு 1968ஆம் ஆண்டு நடக்கும் போது அறிவித்ததன் அடிப்படையில், 1970 ஆம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசால் அமைக்கப்பட்டு அதனுடைய அலுவலகம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2014 ஆம் ஆண்டு விஜயராகவன் செயல்பட்டு வந்தார். அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக சார்பில் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்தை மேம்படுத்த கோரி அரசு சார்பில் 34 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இதனை டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் என்ற கம்பெனி டெண்டர் எடுத்து இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்தப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்திய போது ரூ.19.50 லட்சம் மட்டுமே பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் இயக்குநராக இருந்த விஜயராகவன் மற்றும் டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷனின் மேலாளர் விஜயகுமார் ஆகியோர் இணைந்து ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.12.66 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக கிடைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் விஜயராகவன் மற்றும் டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் என்ற கம்பெனியின் மேனேஜர் விஜயகுமார் மீதும் மோசடி உள்ளிடப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.