அதிமுக நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், அக்கட்சியின் நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகார்தாரரும் காணொலி மூலம் ஆஜரானதோடு, இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகக் கூறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருதரப்பினர் சமரசத்தை ஏற்றுக் கொண்ட திபதி , முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.