முக்கியச் செய்திகள் தமிழகம்

சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கை

நாகை அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு,
சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் சுமார்
500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு
தனி சுடுகாடு இல்லாததால் கடற்கரை ஓரம் பறவையாற்றை கடந்து அக்கரையில்
இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இறந்தவர்களை உடலில் அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் இறங்கி செல்வதால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்துவிட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பரவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதையும் படிக்க: மூணாறில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் படையப்பா யானை

பல ஆண்டுகாலம் கோரிக்கை முன்வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த ராணி என்பவர் சடலத்தை ஆற்றைக் கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர். மேலும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, நிரந்தரமாக பாலம் அமைத்து சுடுகாடு அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை அரசு செவிசாய்க்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor

மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

Arivazhagan Chinnasamy

அற்புதம்மாள் வாழ்க்கை படத்தை எடுக்கப்போகும் வெற்றிமாறன்!

Vel Prasanth