முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

இந்தியாவின் வண்ணத் திருவிழா ஹோலி; செம்மையா ஹோலியை என்ஜாய் பண்ண மாஸான ஸ்பாட்ஸ்

இந்தியாவில் வண்ணத் திருவிழாவான ஹோலியை கொண்டாட சிறந்த இடங்கள் குறித்தி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி விட்டது. இந்த ஆண்டு ஹோலி வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் நிலமாகும். ஏற்கனவே நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, நாடு முழுவதும்  உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹோலி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசந்த விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. புராணங்களில், ஹோலியின் முதல் நாள் மாலை `ஹோலிகா தஹன்` அல்லது `சோட்டி ஹோலி` என்று கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள்  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவழிக்க வேண்டிய நாள்.

ஹோலி பண்டிகையின் பகலில், மக்கள் வண்ணங்களுடன் கொண்டாடுகிறார்கள். மாலையில், அவர்கள் தங்கள் நெருங்கியவர்களிடம் அன்பு, மரியாதை மற்றும் நன்றியைக் பரிமாறிக்கொள்கின்றனர்.

ஹோலிக்கான சடங்கு ஹோலிக்கு ஒரு நாள் முன்பு நெருப்பை ஏற்றி வைப்பதிலிருந்து தொடங்குகிறது. ஏனெனில், இது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது.  மக்கள் இப் பண்டிகையை கோடைகாலத்தை வரவேற்பதாகாவும் கருதுகின்றனர். ஹோலி பண்டிகையின் பின்னணியில் உள்ள கதை இந்து புராணங்களில், ஹோலி பண்டிகை ‘ஹோலிகா’வை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக துவங்கப்பட்டது.

பிரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகஷ்யபுவின் கட்டளையை ஏற்க மறுத்து, விஷ்ணுவுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தபோது, ​​ஹிரண்யகஷ்யபு அவரைக் கொல்ல அவரது சகோதரி ஹோலிகாவின் உதவியைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஹோலிகா தன் மடியில் பிரஹலாதனை எடுத்துக்கொண்டு நெருப்பில் அமர்ந்தாள். அதன் பிறகும், பிரஹலாதன் தீயினால் பாதிக்கப்படாத நிலையில், ஹோலிகா  உயிருடன் எரிந்தாள். எனவே, ஹோலிக்கு ஒரு நாள் முன்னதாக `ஹோலிகா தஹன்’ கொண்டாடப்படுகிறது.

ஹோலி கொண்டாட பிரபலமான இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

மதுரா: கிருஷ்ணரின் பிறப்பிடமாக மதுரா நகரம் அறியப்படுவதால், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் மதுராவுக்கு வருகை தருகின்றனர். 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது மக்கள் பூக்கள் மற்றும் வண்ணங்களுடன் விளையாடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அங்கு, ஹோலி பல உலர்ந்த வண்ணங்கள், தண்ணீர் பலூன்கள், மற்றும் தண்ணீர் துப்பாக்கிகள் கொண்டாடப்படுகிறது. மதுராவில் உள்ள `பாங்கே பிஹாரி கோவிலை` சுற்றி நடக்கும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களில் நீங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

பர்சானா: ஹோலியின் பிரமாண்டமான கொண்டாட்டங்களைக் காண உங்கள் இடங்களின் பட்டியலில் நீங்கள் சேர்க்கக்கூடிய மற்றொரு இடம் பர்சானா. பர்சானா நகரம் `லாத் மார் ஹோலி` கொண்டாடப்படுகிறது.

உதய்பூர்: உதய்பூரில் ஹோலி கொண்டாட்டங்கள் நகரை அரசவையாகக் மாற்றிவிடுவார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மக்கள் பாரம்பரிய ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து, நெருப்பை சுற்றி வருகிறார்கள். இது ‘தீமையின் மீது நன்மையின்’ வெற்றியைக் குறிக்கிறது. பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அப்போது இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆடம்பரமான இரவு உணவு மற்றும் அற்புதமான வானவேடிக்கைகளும் இதில் அடங்கும். இந்தியாவில் ஹோலி கொண்டாட மிகவும் பிரபலமான இடங்களில் உதய்பூர் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை.

பஞ்சாப்: பஞ்சாபில் உள்ள ஹோலி முழு நாட்டிலும் உள்ள ஹோலியில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இது சீக்கியர்களால் அவர்களது சொந்த பாணியில் கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில், மக்கள் அன்பின் கடவுளான காமதேவரை ஹோலியில் வணங்குகிறார்கள்.

உத்தரகாண்டில், குமாவோனி ஹோலி பாரம்பரிய ராகங்களைப் பாடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

பீகாரில், மக்கள் பாரம்பரியமாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பின்னர் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடர் : இலங்கையை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய அணி

EZHILARASAN D

உடைந்தது 2k கிட்ஸ்களின் உயிர்நாடி இசைக்குழு

Halley Karthik

போலி டாக்டா் பட்டம் வழங்கிய விவகாரம்; தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது

Yuthi