தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்திர ரெட்டி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் – அனுராக் சர்மா,
அரியானா – கரம்வீர் சிங்,
சத்தீஸ்கர் – பூலோதேவி நேதம் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.







