தேர்தலுக்காகவே முதலமைச்சர் பழனிசாமி மக்களை சந்திப்பதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பெண்களுடன் கலந்துரையாடியானர். அப்போது, தமிழ் நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர் என்றும், தமிழகத்தில் குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ளது எனவும் பேசினார்.
மேலும், ஸ்டாலின் முதல்வரானால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறிய கனிமொழி, தான் விவசாயி எனக்கூறும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டினார்.







