முன் களப்பணியாளர்கள் தயக்கமின்றி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும், என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார். மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பரிசு என்றும், அவர் தெரிவித்தார். முன் களப்பணியாளர்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்







