பேருந்தின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள்: பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த தாய்ப்பசு

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் அருகே அரசுப் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்ட கன்றுக்குட்டிகள் இறந்ததுபோல் சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில், கன்றுக்குட்டியை தாய்ப் பசு தன் பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் அருகே அரசுப் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்ட கன்றுக்குட்டிகள் இறந்ததுபோல் சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில், கன்றுக்குட்டியை தாய்ப் பசு தன் பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் அருகே சாலையின் நடுவே மூன்று கன்றுக் குட்டிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கன்றுக்குட்டிகள் மீது மோதியது.

இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை வென்ற ‘அவதார்-2”

இதில், மூன்று கன்றுக்குட்டிகளில் இரண்டு கன்றுக்குட்டிகள் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்டன. இதையடுத்து, பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்துக்கு அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள் இறந்ததுபோல் சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில், கன்றுக்குட்டிகளை தாய்ப் பசு தன் பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.