முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிறுகுறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நாராயன் ரானே, விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், மீன்வளதுறை அமைச்சர் பரிசோத்தம் ரூபாலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட 30 மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலை

இன்னும் ஒரு வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையிலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையிலும் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் வரும் நாட்களில் அதிரடியான அறிவிப்புகளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, மத்திய அமைச்சர்கள், அமைச்சர் (தனி பொறுப்பு), இணை அமைச்சர் என 77 அமைச்சர்களுடன் இரவு 7மணிக்கு பிரதமர் மத்திய அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் சில அமைச்சர்கள் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan

தமிழகத்தில் அதிக வாக்கு, குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் யார்?

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!

Halley karthi