ஆக.30ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமைச்சரவை…

வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் நலன் பயக்கும் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர்  வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.