தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இ.வி.எம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதன்படி,
தாராபுரம் ( சுற்று 20)
1.தவெக (சத்தியபாமா) – 60078
2.திமுக (சுகன்யா)– 50075
3.அதிமுக (பானுமதி) – 38760
4.நாதக (கார்த்திகா) – 4787
5.சிபிஐ ( லட்சுமணன்) – 1065
20 ஆம் சுற்று முடிவில் 10003வாக்குகள் பெற்று தவெக முன்னிலையில் உள்ளது.
மதுராந்தகம் (சுற்று – 13)
1.தவெக (மரகதம் குமரவேல்) – 50206
2.திமுக (பரந்தாமன்)-35923
3.அதிமுக (கணிதா சம்பத்) – 31175
4.நாதக (ஜானகிராமன்) -1753
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 1389
மதுராந்தகத்தில் தவெக 14283 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.




