ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் விருதுக்கு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்சிஸ் ஹால்சன்(Francis Halzen) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த ஆனி கர்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘தமிழ் வம்சாவளி’ நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இனவெறி ஆட்சிக் காலத்தில் இந்தியத் தமிழ் வம்சாவளி குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறப் பாகுபாடு, இனப் பிரிவினை மற்றும் ஒதுக்கிவைப்பு ஆகியவற்றை எதிர்த்து நின்று, ஒரு வழக்கறிஞராகவும் சட்டத் துறையில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த நெல்சன் மண்டேலா உள்ளிட்டோருக்காக வாதாடிய நவநீதம் பிள்ளை, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக குறிப்பிடத்தக்க பணியை ஆற்றினார்.




