தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இ.வி.எம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார்.
அதன்படி, தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
மதுராந்தகம் (சுற்று – 16)
1.தவெக (மரகதம் குமரவேல்) – 57994
2.திமுக (பரந்தாமன்)- 41259
3.அதிமுக (கணிதா சம்பத்) – 35614
4.நாதக (ஜானகிராமன்) -2064
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 1525
மதுராந்தகத்தில் தவெக 16735வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.




