நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மனித உரிமைகளுக்காகவும் உலக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் சமரசமின்றிப் போராடி வரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச சட்ட மேதை நவநீதம் பிள்ளை அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கிறது.

நிறவெறி எதிர்ப்புப் போராட்டம் முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வரை அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் நீதிக்கும் சமத்துவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நவி பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.