அந்தரத்தில் தொங்கிய பஸ்: அலறிய பயணிகளை அமைதியாய் காப்பாற்றிய டிரைவர்

பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிய பஸ்சில் இருந்து பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும்…

பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிய பஸ்சில் இருந்து பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தின் ஷில்லாய் (Shillai) தனியார் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை 707 இல் பொஹ்ராட் காட் என்ற பகுதியின் அருகே வந்தபோது, திடீரென பஸ் டயர் வெடித்தது.

இதனால் பஸ் அங்கும் இங்கும் தடுமாறி, சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுவதற்கு தயாராக இருந்தது. பஸ்சில் இருந்த 22 பயணிகளும் அலறினர்.

ஆனால், கலங்காத டிரைவர், பிரேக்கை அழுத்தி பிடித்து பஸ், பள்ளத்தாக்கில் விழுந்து விடாமல் நிறுத்தினார். பஸ் இருந்த பயணிகள் ஒவ்வொருவரையும் இறங்க சொன்னார். அனைவரும் இறங்கியது தெரிந்ததும்  பிறகு பத்திரமாக இறங்கினார். பஸ் அப்படியே தொங்கியபடி நின்றது.

உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.