பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 17 பேர் பலி..!

பிரேசில் நாட்டில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் நாட்டின் பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள சலோவா என்ற நகரத்தில் இருந்து அண்டை மாநிலமான பஹியாவில் உள்ள ப்ரூமாடோ நகருக்குச் சென்று கொண்டிருந்த ​​பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து சால்லையோரத்த்ல் மணல் மேட்டில் மோதி  பக்கவாட்டில் கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பற்றிய உடனடி தகவல்கள் தெரியவில்லை.

விபத்து குறித்து பதிவிட்டுள்ள பாஹியா ஆளுநர் ஜெரோனிமோ டீக்சீரா, “நான் எனது குழுவுடன் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன், மேலும் அனைத்து குடும்பங்களின் உயிர் இழப்பு, காயங்கள் மற்றும் துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில், சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில்  மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் ஒரு லாரியும் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.