தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் நேற்று (மார்ச்.28) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 45 பேர் உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த 8 வயது சிறுமிக்கு மருத்துவமனையில்…

தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர்.

தென்னாப்பிரிக்காவில் நேற்று (மார்ச்.28) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 45 பேர் உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த 8 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அண்டை நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில் இருந்து ஈஸ்டர் பண்டிக்கைக்காக புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில் இருந்து ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக,  தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணம் மோரியா நகரத்திற்கு பேருந்தில் புனிதப் பயணம் வந்துள்ளனர்.  அப்போது பேருந்து மொகோபனே மற்றும் மார்கென் இடையே மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனே அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும்,  சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.