“முத்திரைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்” – வைரமுத்து வரவேற்பு

தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது, இந்த பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…

தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது, இந்த பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முத்திரைத் திட்டங்கள்” கொண்ட பட்ஜெட் இது என்று தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பெட்ரோலுக்கு ரூ.3 குறைவு, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி என பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.

https://twitter.com/Vairamuthu/status/1426166286950690816

அதிமுக, மநீம கட்சியினர் இந்த பட்ஜெட் மீது “தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறிவிட்டது” என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.